வாயை திறக்காதே! ஜெயம்ரவிக்கு அமீர் உத்தரவு!
சாக்லேட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்த ஜெயம்ரவியை பேராண்மை திரைப்படம் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்ட ஜெயம்ரவியை மீண்டும் காதல் கதையில் பொருத்திவிட்டார் பிரபுதேவா. மே -6ஆம் தேதி வெளியாகும் எங்கேயும் காதல் படத்தில் பிரான்சில் வாழும் இளம் தொழில் அதிபராக நடித்திருக்கிறாராம் ஜெயம் ரவி.
 
பிரான்சில் 11 மாதங்கள் தொழில்... தொழில் என்று அலைந்து விட்டு ஒரு மாதம் மட்டும் ஜாலியாக விடுமுறையை அனுபவிக்கும் காதலை வெறுக்கும் ஒரு கதாபாத்திரமாம் ஜெயம்ரவிக்கு. இவர் காதலையே காதலிக்கும் ஹன்ஸிகா மோத்வானியை எப்படி லவ் பண்ணுகிறார் என்பதுதான் எங்கேயும் காதல் படத்தின் கதையாம். மென்மையான காதல் கதையில் ஜெயம் ரவியை தற்போது வன்மையான தாதாவாக ஆதிபகவன் படத்தில் நடிக்க வைத்துக்கொண்டிருக்கிறாராம் இயக்குனர் அமீர்.
 
அமீரின் தாதா கதாபாத்திரம் பற்றி ஒரு சின்ன விஷயம் கூட வெளியே தெரிந்து விடக்கூடாது என்று தனக்கு உத்தரவு போட்டிருப்பதாகச் சொல்கிறார் ஜெயம்ரவி.
 
இதனால் ஆதிபகவன் பற்றிய கேள்விகளுக்கே பதில் சொல்ல மறுக்கும் ரவி, ஆதிபகவன் தாதா கதாபாத்திரத்துக்காக முதன் முதலில் தாடி மீசை வைத்து நடிக்கிறார். இந்தப்படம் முடிந்ததும் நிச்சயமாக அமீருடன் கண்ணபிரானிலும் நடிப்பாராம். ஆனால் அது 2013-ஆம் ஆண்டு என்கிறார். ஆதிபகவனை சிக்கன் பிரியாணி என்று சொன்னால் கண்ணபிரானை பாகற்காய் சாம்பார் என்கிறார் என்கிறார் ஜெயம் ரவி.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்