ஸ்ருதிஹாசனைக் கவர்ந்த இயக்குனர்!
ஸ்ருதிஹாசன் கால் ஷீட்டுக்காக கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, ராதாமோகன் ஆகிய மூன்று இயக்குனர்கள் அச்சாரம் போட்டிருக்கிறார்கள். பெரிய இயக்குனர்களே இப்படிக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு புதுமுக இயக்குனர் ஸ்ருதியை தன் படத்துக்கு இழுத்துவிட்டார்.
 
இதில், சின்ன வித்தியாசம் என்னவென்றால் அறிமுக இயக்குனர் சாப்ளின் ஸ்ருதியை அழைத்து வந்திருப்பது தன் படத்தில் ஒரு பாடலைப் பாடுவதற்கு!

சாப்ளின் இயக்கும் உதயன் படத்துக்கு இசை சாக்ஸாஃபோன் வாத்திய இசையில் சாதனைகள் பல படைத்திருக்கும் கதிரி கோபால் நாத்தின் மகன் கதிரி. மணிகாந்த். விளம்பர ஜிங்கிள்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய கதிரி மணிகாந்த் தெலுங்குப்பட உலகில் ஏற்கனவே பிஸியான மியூசிக் டைரக்டர். இவரது இசையில் உருவான பல தெலுங்குப் பாடல்கள் ஸ்ருதி ஹாசனின் ஃபேவரைட் பாடல்களாம். இந்த ஒரு விஷயம் போதாதா ஸ்ருதி பாடிக்கொடுத்திருப்பதற்கு! முதல்வரின் பேரன் அருள்நிதி இரண்டாவதாக நடிக்கும் படம்தான் உதயன்.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்