மூன்று படங்களை ஒப்புக்கொண்ட விஷால்!


பாலாவின் படத்தில் நடித்தாலே அதன் பிறகு ராக்கெட் மாதிரி பறக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் மாஸ் ஹீரோக்கள். விக்ரம், சூரியா, ஆர்யா, வரிசையில் இப்போது அவன் இவன் படத்தின் மூலம் பாலவின் நாயகனாக மோல்ட் ஆகி வந்திருக்கும் விஷால்.
 
ஜெட் வேகத்தில் படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் விஷால். அவன் இவன் படத்தின் பேச் ஒர்க் படப்பிடிப்பில் நடித்துக் கொடுத்துவரும் விஷால், அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

அடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்குப் பட்டத்து யானை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்போது அடுத்த அதிரடியாக, படிக்காதவன் படத்தை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார் விஷால்.
 
இதை 2012 பிப்ரவரியில் தொடங்க இருக்கிறார்களாம். இதில் விஷால் பிரைவேட் டிடக்டிவாக நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமடி ஆக்‌ஷன் என்கிறார்கள் சுராஜ் வட்டாரத்தில் இருந்து.

 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்