மிகவும் விரும்பப்படும் மனிதர்களில் தமிழ் நட்சத்திரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மிஸ்டர் பொதுஜனம், சினிமா ரசிகர்கள், ஜொள்ளர்கள் என எல்லாத் தரப்பிலும் பெரிதும் விரும்பப்படும் முதல் ஐம்பது இந்தியப் பெண்களை இணைய வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். கடந்த ஆண்டு பெரிதும் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் தமிழ் நடிகைகள் ஜெனிலியா, அசின், த்ரிஷா, ஸ்ரேயா, ஸ்ருதி ஹாஸன் ஆகியோரும் இடம் பிடித்திருக்கிறார்கள். 
 
சிரிக்கச் சிரிக்கத் தென்னிந்திய ரசிகர்களைச் சிறைபிடித்து வைத்திருக்கும் ஜெனலியாவுக்கு தேசிய அளவில் 6ஆவது இடம்.  கஜினி மூலம் புகழ் பெற்ற அசினுக்கு 11ஆவது இடம். மெல்லிடை அழகி ஸ்ரேயாவுக்கு 13ஆவது இடமும் தென்னகத்தில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் த்ரிஷாவுக்கு 18ஆவது இடமும் கிடைத்திருக்கிறது. லக் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி ஹாஸன் 22ஆவது இடத்தில் இருக்கிறார். இவர்கள் அனைவருமே முதல் முறையாக இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதலிடம் காத்ரினா கைஃபுக்கு. கிளிமஞ்சரோ அழகி ஐஸ்வர்யா ராய்க்கு மூன்றாவது இடம். ராய் இன்னும் மவுசோடுதான் இருக்கிறார் என்பதற்கு இந்த ரேட்டிங் உதாரணம்.
 
ஆண்களில் நம் ஊர் நாயகர்கள் சூர்யா, அஜித், விக்ரம் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். இவர்கள் முறையே 13, 18, 33 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளார்கள். இவர்களும் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். முதல் இடம் ஹ்ரித்திக் ரோஷனுக்கு.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்