ஜூலி நம்பினால் காலி!

கத்தாழக் கண்ணழகி, கள்ளூறும் உதட்டழகி ஏஞ்சலினா ஜோலி .தானுண்டு  தன் ஜோலியுண்டு என்று இருப்பவர்கள்கூட இவரைப் பார்த்துவிட்டால் தடுமாறும் அளவுக்குஅழகும் கவர்ச்சியும் கொண்ட ஏஞ்சல் இவர். திருமணம், குழந்தை என்று ஆன பிறகும் பலரால் காதலிக்கப்படுகிற அழகி. இவரது எடுப்பான கவர்ச்சியும், மிடுக்கான கம்பீரமும் நல்ல - கெட்ட பாத்திரங்களில் தோன்ற நம்ப வைக்கும் வசீகரங்கள். அதனா தான் ரசிகர்களின் இதயங்களை வென்றது போலவே ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். இவர் நடிக்கும் ஹாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹீட்டில் சக்கை போடு போடுபவை. தற்போது ஜூலி நடித்து டிசம்பர் 24 –ஆம் தேதி வெளிவரஇருக்கும் `தி டூரிஸ்ட்` படத்தை உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அமெரிக்கச்  சுற்றுலாப் பயணி ஒருவன் இத்தாலியைச்சுற்றிப் பார்க்க வருகிறான். வருகிறவன் மனதை ஒர் அழகி சுற்றிக்கொள்கிறாள். அவள் காதலியா இல்லை பாதகியா என்பது புரியவில்லை. தென்றலை ரசிக்கச்  சென்றவன் சூறாவளியில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வான் என்பதே கதை. இதை இயக்கியிருப்பவர். ஃப்ளோரியன் ஹென்கிள் வான் டானர்ஸ்மார்க் (Florian Henckel Von Donnersmarck). இவர் ஒரு ஜெர்மனிக்காரர். தன் `தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ்` ( The lives of others) படத்துக்காக ஆஸ்கார் விருதை வென்றவர்.

ஏஞ்சலினா ஜூலி, அழகான, படித்த, அறிவான, திறமையான அசாதாரணமான, பயங்கரமான பெண்ணாக வருகிறாராம். இந்த மாதிரி ஒரு அழகான பெண்ணை நம்பி ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் அமெரிக்க டூரிஸ்ட்டாக வருகிறார் ஜானி டெப் . இவரும் லேசுப்பட்ட நடிகரல்ல. திரையுலகில் 25 ஆண்டுகளாக நடித்துவரும் வெள்ளி விழா நடிகர். அகாடமி விருது உள்படப் பல விருதுகளை வென்றவர் என்றாலும் ஏஞ்சலினா ஜூலியுடன் இணையும் முதல்படம் இது.

இயக்குநர், நாயகி தவிர இன்னொரு ஆஸ்கார் விருது வென்றவரும் படத்தில் உள்ளார். அவர் ஜூலியன் ஃபெல்லோஸ். இதன் திரைக்கதை ஆசிரியாரான இவர் ஏற்கெனவே `காஸ்ஃபோர்டு பார்க்(Gos Ford Park) திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது வென்றவர். `தி டூரிஸ்ட்` ஒரு காதல் கதைதான் என்றாலும் படத்தில் பல ஆச்சரியங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது என்கிறார் திரைக்கதாசிரியர். பாஸ்போட், விசா இல்லாமல் இத்தாலியை சுற்றிப் பார்த்து, வெனிஸின் அழகை அலசி ரசித்த அனுபவத்தை படம் ஏற்படுத்தும்; கூடுதலாக ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த காதல் கதையைப் பார்த்த மகிழ்ச்சியும் கிடைக்குமாம்

`தி டூரிஸ்ட்` படத்தை உலகெங்ககும் சோனி பிக்சர்ஸ் வெளியீடுகிறது. ஜூலியைப் பார்க்கிற ஜோலி இனி ரசிகர்களுடையது.

 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்