வானத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மம்தா
கடந்த ஓராண்டு காலமாகவே லிம்ப்போமா கேன்சரால் பாதிக்கப்பட்டு அதற்காக கீமோ தெரபி சிகிச்சையை எடுத்துவந்திருகிறார் மம்தா. அவர் தீவிர சிகிச்சையில் இருந்த காரணத்தினாலேயே அமீரின் ஆதிபகவன் படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது என்ற தகவலைத் தெனாலியே முதலில் தந்தது. தற்போது லிம்ப்போமா கேன்சரில் இருந்து முழுவதும் மீண்டு வந்துள்ள மம்தா, கடைசி கட்டமாக எடுத்துக்கொண்ட கீமோதெரபி சிகிச்சைக்காக, தனது தலைமுடியைப் பாதியாக வெட்டிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 14-ஆம் தேதி ஞாயிறு இந்தியா குழந்தைகள் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்க, அன்றுதான் மம்தாவின் பிறந்த நாள். மரனத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய மம்தா தனது பிறந்த நாளை மிகுந்த அர்த்தத்தோடு கொண்டாடியிருகிறார். மாற்றுத் திறன் படைத்த 360  குழந்தைகளை ஏர் இந்தியா விமானத்தில் கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை அழைத்துச் சென்று அவர்களது விமானத்தில் பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்த மம்தா, பறக்கும் விமானத்தில் அந்தக் குழந்தைகளோடு தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருகிறார்.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்

veera
இது மாதரி யார் நலத்து பண்ணேன நலேருக்கும்