போலீசுக்கு ரஜினியின் தீபாவளி இனாம்!
பண்டிகை சீசன் வந்துவிட்டாலே இலவசத்துக்கும், இனாமுக்கும் பஞ்சம் இருக்காது. தீபாவளி கிஃப்ட் மூலம் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் வீடும், அவரது அருணாசலா ஹெஸ்ட் ஹவுஸ் ஹோட்டலும் சென்னை தேனாம்பேட்டை  போலீஸ் சரகத்தில் உள்ளது. ரஜினியின் புகழ்பெற்ற ராகவேந்திரா திருமண மண்டபம் கோடம்பாக்கம் போலீஸ் சரகத்தில் உள்ளது. இந்த இரண்டு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தீபாவளி கிஃப்ட் பார்சல்களை விநியோகித்து உள்ளாராம் ரஜினி.

ஒரு கிஃப்ட் பார்சலில் ரேமாண்ட் பேண்ட் பிட் மற்றும் ஷர்ட் பிட் தலா ஒன்று. ஒரு கிலோ இனிப்புப் பெட்டி ஒன்று. இரண்டாயிரம் மதிப்புள்ள புடவை ஒன்று. ஒரு விலை உயர்ந்த செண்ட் பாட்டில், இரண்டு கிராம் தங்க நாணயம் ஆகியவை இருந்ததாகத் தகவல் தருகிறார்கள் ரசிகமன்ற வட்டாரத்தில் இருந்து.
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்

R.Gopi
இதில் என்ன தவறு? இதே போல், அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அந்தந்த இடத்தில் வசிக்கும் பெரிய மனிதர்கள் கிஃப்ட் தரலாமே? சொல்லாமல் தந்தால் தான் தப்பு... இங்கே ரஜினி அவர்கள் முன் அனுமதி வாங்கிய பின்னரே தந்திருக்கிறார்... குறைந்த பட்சம் சில பேர்களையாவது (45 குடும்பத்தாரை) மகிழ்வித்தாரே.. அதற்காக அவருக்கு ஒரு சல்யூட்....