தெனாலி
தரும் பிரத்தியேகச் செய்தி
மலையாளப்
பட உலகில் எம்.டி.வியின் பாதிப்பில் உருவான மறைந்த திரைக்கதை மேதை லோகிததாஸிடம் உதவி
இயக்குனராக இருந்தவர் மீரா கதிரவன். இவர் கவிஞர்,
எழுத்தாளரும்கூட. லோகிதாஸ் தமிழில் முதலில்
இயக்கிய கஸ்தூரிமான் படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்கு வகித்தவர் இவர். மலையாளத்தின்
தலை சிறந்த திரைப்படங்கள் சிலவற்றின் திரைக்கதையைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர்,
இயக்கிய முதல் படம்தான்
அவள் பெயர் தமிழரசி. பரவலாகப் பாராட்டுகளைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து தனது
அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார் கதிரவன்.
ஒரே
நேரத்தில் இரண்டு படங்களைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் மீரா கதிரவனின் முதல் படம்
கொம்பன். இதில் கோரிப்பாளையம் ஹரீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது படம் பாமரன். இதில்
ஒரு பிரபல நடிகரின் வாரிசு நடிக்கப் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.
இந்த
இரண்டு படங்களுமே மீரா கதிரவனுக்கு கமர்ஷியல் வெற்றி, கலை வெற்றி இரண்டையுமே கொடுக்கும் என்றார்கள்
தயாரிப்பாளர்கள் தரப்பில்!