மறுக்கும் லட்சுமி ராய்!
ட்சுமி ராய் தற்போது நடித்து முடித்திருக்கும் இரண்டு தமிழ்ப் படங்கள் தாண்டவம் மற்றும் வனயுத்தம்! தாண்டவம் படத்துக்காக லண்டனில் தங்கியிருந்த லட்சுமி ராயைப் பற்றி கடந்த வாரம் முழுவதும் மீடியாவில் பிரதானமாக ஒரு செய்தி இடம்பிடித்திருந்தது.
 
‘தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் ரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்’ என்பதுதான் அந்த செய்தி.

“நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்துகொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியுமா..? உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை. எனவே எனக்கான அறையைத் தருமாறு அவர்களிடம் கூறிவிட்டு, வரவேற்பறையில் காத்திருந்தேன்.

அப்படியும் கூட அந்த அறை கிடைக்கவில்லை. வேறு ஹோட்டலில் வேறு அறையைத்தான் தந்தார்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் அதில்தான் தங்கினேன். ஆனால் அதற்குள் யார் என்ன சொன்னார்களோ…விஷயம் வேறு மாதிரி பரவி, என்னமோ நான்தான் பிரச்னையைக் கிளப்பியதாக செய்தி வந்துவிட்டது. இப்படித்தான் நான் ஏதோ தனி விமானத்தில் சென்னை வந்ததாகவும் செய்தி வெளியானதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றவர்,  காதும் காதும் வைத்த மாதிரி ‘தேரா பீனா  ஜியா நகின் ஜெயா’ என்ற இந்திப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சதிஷ் கௌசிக் இயக்கிக் கொண்டிருக்கும் படமாம் இது!
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்