பிருந்தாவனமும் நொந்த குமாரனும்!
டோலிவுட்டை கடந்த ஆண்டு கலக்கிய படங்களில் ஒன்று ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், சம்ந்தா நடித்த பிருந்தாவனம்! ஆந்திர ஃபாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூல் செய்து பட்டையைக் கிளப்பிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு பெரிய போட்டியே நடந்தது!
 
பிருந்தாவனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முதலில் கைப்பற்ற நினைத்தவர் இளையதளபதி விஜய்! அதன்பிறகு சித்தார்த், விஷால் என்று இதற்காக பெரிய ஸ்டார் வாரே நடந்தது என்றார்கள். ஆனால் கடைசிநேர க்ளைமாக்ஸ் போல விஜயகாந்த் தனது மகன் ஷண்முகப்பாண்டியனை ஹீரோவாக அறிமுகம் செய்ய ‘பிருந்தாவனம்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் என்று கொளுத்திப் போட்டார்கள். ஆனால் தற்போது அது உண்மையல்ல அல்ல என்பது உறுதியாகிவிட்டது!
 
உண்மையில் பிருந்தாவனம் ரீமேக் உரிமையை தனது மகனுக்காக வாங்கிவிட்டதாக தனது வாயால் மீடியாவிடம் சொன்னால், ரீமேக் உரிமைக்கான போட்டியில் இருந்து விஜய் உள்ளிட்ட நடிகர்கள் விலகிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தாரம் கேப்டன்!
 
அவர் எதிர்பார்த்தது போலவே முன்னணி நடுவர்கள் விலகிக் கொண்டனர். இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை 40 லட்சத்துக்குக் கேட்டாராம் கேப்டன்! இன்னொருபக்கம் இந்தப்படத்தை வைத்து தமிழில் இழந்தத் தொகையை பிடிக்க வேண்டும் என்று நினைத்த சில நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களும் இந்த போட்டியில் இருந்தனர்.
 
அவர்களை மிரட்டி, உருட்டி பணிய வைக்க முடியாது என்பதால் அவர்களை கண்டுகொள்ள வில்லையாம் கேப்டன்! இதனால் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி ரியல்மீடியாஸ் நிறுனத்தின் உரிமையாளர் டி.ரமேஷ் தாண்ட்ரா பிருந்தாவனத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 3.5 கோடி கொடுத்து கைப்பற்றிருப்பதை இன்று தனது செய்தித் தொடர்பாளர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

மிகப் பிரமாண்டமாகத் தமிழில் தயாராக இருக்கும் இந்தப் படத்தை தமிழில் இயக்க இருப்பது யார், நாயகன், நாயகி யார் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை!
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்