ஹாட்ரிக்
அடிக்கக் காத்திருக்கிறார் கார்த்தி. ஆகஸ்ட் 20 ஆம் தேதி அந்த வெற்றிக்கான நாளாக அதாவது
ரிலீஸ் தேதியாக டிக் அடித்திருக்கிறார்கள்.
ஸ்டுடியோ
கிரீன் பட நிறுவன அதிபர் கே.ஈ. ஞானவேல் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் நான்
மகான் அல்ல. பருத்தி வீரன், பையா ஆகிய இரண்டு பெரிய வெற்றிப் படங்களின் நாயகன்
கார்த்தியும், அவருக்கு
ஜோடியாக தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியான காஜல் அகர்வாலும் மேட் ஃபார் ஈச் அதர் என்று
சொல்லும் ஜோடியாக கெமிஸ்ட்ரியில் பிண்ணியிருக்கிறார்கள். ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின்
எதிர்பாராத ஆனால் யதார்த்தமான யூ டேர்ன்கள்தான் விறுவிறு திரைக்கதை. ஒரு உண்மைச் சம்பவத்தை
மையமாகக்கொண்டு கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சுசீந்திரனுக்கும் இது
இரண்டாவது படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
நான் மகான் அல்ல. இந்தப் படம் பற்றி சில ஹைலைட்ஸ் :

இதுவரையில் தமிழ் சினிமா பார்த்திராத புதிய
வில்லன்கள் படத்தில் வருகிறார்கள்.
யுகபாரதி எழுதி, மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கும் “தெய்வம்
இல்லை எனும்போது” என்று தொடங்கும் அப்பா
பாடல் – படத்தில் பேசப்படும். அப்பாவிற்குரிய அர்ப்பணிப்பாக அந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
எல்லாப் பாடல்களையும் சென்னையைச் சுற்றியே மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
மதி. சென்னை இத்தனை அழகா எனத் தோன்றுமாம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு.
ஜீவா என்ற பெயரில், கலெக்ஷன் ஏஜென்ஸி வேலை செய்யும் இளைஞராக கார்த்தி
யதார்த்த ரோலில் வாழ்ந்திருக்கிறாராம்.
தெலுங்கில் மகாதீரா படத்தின் பிரம்மாண்ட ஹிட்டுக்குப்
பிறகு காஜல், தமிழில்
ஒப்புக்கொண்ட முதல் படம். அவர் டேட்ஸ் கொடுத்தபடி படபிடிப்பு நடத்தியிருக்கிறார் இயக்குநர்.
காஜலின் ஒரு நாள் கால்ஷீட்டைக்கூட வீணாக்கவில்லையாம்.
கார்த்திக்கின் தந்தையாக பசங்க புகழ் வாத்தியார்
ஜெயப்பிரகாஷ் மிகப் பெரிய கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.
சென்னை பின்னணியில் கதை அமைந்துள்ளது..
இந்த படத்தில் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்த
ராஜீவன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.
என்பது நாட்களில் முடிக்க ஒப்புக்கொண்ட இத்திரைப்படத்தை,
மிகுந்த நேர்த்தியாக
பிளான் செய்து எழுபத்தேழு நாட்களில் முடித்திருக்கிறார் சுசீந்திரன்.
20ஆம்
தேதி வரைக்கும் காத்திருக்க முடியாது என்கிறீகளா?