டாக்குமெண்டரிப் படத்தில் சத்தியராஜ் மகள்
மிழ்சினிமாவில் அழுத்தமான தடம் பதித்தவர்கள் ஏனோ தங்கள் பெண் பிள்ளைகளை அவ்வளவாக சினிமாவுக்குள் அனுமதித்ததில்லை. பாக்கியராஜின் மகள் அடம்பிடித்தே படத்தில் நடித்தாராம்! அதேபோல புரட்சித் தமிழன் சத்தியராஜின் மகள் நடிக்க முயன்றபோதெல்லாம், அதை சத்தியராஜ் கெடுத்து விட்டுக்கொண்டே இருப்பாராம்! இதனால் வெறுத்துபோனவர், என்.ஜி.ஓ அமைப்பைத் தொடங்கி சமூகசேவையில் குதித்து விட்டார்! தற்போது ஒருவழியாக ஒரு படத்தில் நடித்துவிட்டார் திவ்யா சத்தியராஜ். ஆனால் இது டாக்குமெண்டரிப் படம்!

சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்து எடுக்கப்பட்ட, சுமார் 45 நிமிடங்கள் ஓடும் அந்த டாகுமெண்டரி படத்தை, மும்பை நவீன நாடக வட்டாரங்களில் மிகவும் புகழ் பெற்றவரான ஷிராஸி இயக்கியிருக்கிறார். இது பற்று கூறியிருக்கும் அவர்…!
“நடிகை கொங்கனா சென்ஐ மையப்பாத்திரமாக வைத்துக்கொண்டு, முதலில் இந்தப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். அவர் பிஸியாக இருந்ததால், அந்தப்பாத்திரத்துக்கு வேறு ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோதுதான், நான் தற்ச்செயலாக திவ்யாவை சந்தித்தேன். குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய படம் இது.

குழந்தைத்தொழிலாளர்கள் சம்பந்தமான தொண்டு நிறுவனங்களில் திவ்யா பணியாற்றியிருப்பதை அறிந்த போது, எனது கதாபாத்திரத்துக்கு திவ்யாதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.எனது டாக்கு படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது, கண்டிப்பாக படமும் திவ்யாவின் நடிப்பும் பெரிதும் பேசப்படும்.’’ என்கிறார் ஷிராஸி. திவ்யா….! திவ்யா! என்று இந்தப் படத்தைப் பார்த்து கைத்தட்டி பாராட்டியிருக்கும் முதல் ஆள் சகோதரர் சிபிராஜ்!
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்