முதல்வருக்கு மட்டும் நேரடி ஒளிபரப்பு!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு என்றென்றும் ராஜா என்ற மிகப்பிரமாண்டமான லைவ் இசைநிகழ்சியை   ஜெயா டிவிக்காக நடத்துகிறார் இளையராஜா. இந்த நிகழ்சியில் பங்கேற்க புத்தாபெஸ்ட் சிம்பொனி இசை வாத்தியக்கலைஞர்களை அழைத்திருக்கிறார் இளையராஜா. கடைசியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் லைவ் கச்சேரி நடத்திய ராஜா, தற்போது மனைவியை இழந்த சோகத்துக்கு மத்தியிலும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார். 

கடந்த முறை நேரு ஸ்டேடியத்தில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்த போது கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை லைவ்வாக ஒளிபரப்பினார்கள். அப்போதும் முதல்வர் ஜெயலலிதாதான். தன் வீட்டில் இருந்தபடியே, ராஜாவின் முழு நிகழ்ச்சியையும் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் இடைவிடாமல் கேட்டு ரசித்தாராம் ஜெயலலிதா.  தற்போது ஜெயலலிதாவுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சி லைவ் செய்யபடுகிறதாம் போயஸ் கார்டனுக்கு. இந்த நிகழ்ச்சியை பிறகு பொங்கல் அன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறார்களாம்.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்