தலயின் தடாலடி திட்டங்கள் இரண்டு! அஜித் எப்போதுமே துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடியர் என்பதற்கு பார்முலா-2 கார் பந்தயங்களில் அவர் கலந்துகொள்வதைப் போல சிறந்த உதாரணம் இருக்க முடியாது. மனைவி ஷாலினி, அவரது அம்மா, மாமனார், நண்பர்கள் என்று எத்தனையோ பேர் தடுத்தும் “ கார் பந்தயத்தைப் பற்றி என்னிடம் நெகட்டிவாகப் பேசுவதாக இருந்தால் தயவுசெய்து பேச்சையே நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டார் என்கிறார்கள் தலைக்கு நெருக்கமானவர்கள். இதைப் போலவேதான் மல்டி ஸ்டாரர் படத்தில் அஜித் நடிக்க எடுத்த துணிச்சலான முடிவும்!

இப்போது இன்னும் இரண்டு துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறாராம் அஜித். மதராஸப்பட்டினம் இயக்குனர் விஜய், பட்டியல் பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இரண்டு பேருமே அஜித்தை வைத்து ஏற்கனவே படம் எடுத்தவர்கள். இரண்டு பேருமே திறமையானவர்கள் 2011இல் இரண்டு பேர் படத்திலும் நடிக்கிறேன் என்று உறுதி செய்துவிட்டாராம் அஜித். அதில் விஷ்ணு இயக்கிய பில்லா ரீமேக்கின் இரண்டாவது பாகத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ள அஜித், திரைக்கதை வேலைகளைத் துரிதப்படுத்தச் சொல்லியிருக்கிறாராம். அடுத்து ஹிந்தியில் படம் இயக்கச் செல்லும் இயக்குனர் விஜயை தனக்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும்படி பணித்திருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. இதில் விஜய் இயக்கும் படத்தைக் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க இருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலக்குங்க தல!
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்