மீண்டும் ஹீரோ! பிரகாஷ்ராஜ் தரும் சர்ப்ரைஸ்!

கே. பாலச்சந்தரின் கல்கிக்குப் பிறகு பிரகாஷ்ராஜின் தனி ஆவர்த்தனம் அரங்கேறிய படமென்றால் அது தயா. எம். செந்தில்குமார் இயக்கத்தில் படத்தில் மாறுபட்ட தாதா ஹீரோவாக தயாவில் கலக்கினார் இந்த தேசிய விருது நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ். மொழி படத்தின் மூலம் நல்ல சினிமா மீதான தனது காதலை வெளிபடுத்திய பிரகாஷ்ராஜ் சினிமாவில் சம்பாதிப்பதை அதிலேயே முதலீடு செய்ய நினைப்பவர்.

 

ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகி தமிழ்ப் பெற்றோரின் பாராட்டுக்களையும் மீடியாவின் பாராட்டுகளையும் அள்ளிய அபியும் நானும் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளம் காட்டியிருக்கிறார். தெலுங்கில் டிரெண்ட் செட்டிங் படமாக கடந்த ஆண்டு கலக்கிய ஹாப்பி டேய்ஸ் படத்தை இனிது இனிது” என்ற பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் குகன் இயக்க, பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கிறார். தற்போது இதே வழியில் இந்த ஆண்டில் துவக்கத்தில் வெளியாகி வசூல், விமர்சனம் இரண்டிலுமே பாராட்டுக்களைக் குவித்த பிரஷ்தானம்(Prashthanam) தெலுங்குப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். சாய்குமார் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தைத் தமிழில் பிரகாஷ்ராஜே இயக்கி, தயாரிப்பதோடு அதில் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக டூயட் மூவீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல். இந்தப் படத்தில் நடிப்புக்கு செம தீனி இருக்கிறதாம்!

செல்லம் ஒரு மீனைப் பிடிச்சா அது வஞ்சிரம் மீனாதானே இருக்கும்!

திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்