அய்யர் சொன்னது சரியா?
 
டெல்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மணி சங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள்தான் இப்போதைய ஹாட் டாபிக். ‘காமன்வெல்த் போட்டிகளுக்கு மழை இடையூறு கொடுப்பது குறித்து மகிழ்ச்சி. இந்தப் போட்டிகள் தோல்வியடைந்தால் நான் சந்தோஷப்படுவேன். வெற்றிகரமாக இந்தப் போட்டிகளை அவர்கள் நடத்திவிட்டால், அப்புறம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என எல்லாவற்றையும் கொண்டுவருவார்கள். இந்தப் போட்டிகளை நடத்துபவர்கள் கடவுள்கள் கிடையாது. அவர்கள் தீய சக்திகள்!’ என்று சொல்லியிருக்கிறார் அய்யர்.
 
அய்யர் ஏன் காமன்வெல்த் போட்டிகளை எதிர்க்கிறார்? இந்தியா போன்ற ஏழை நாடு இதற்காக செலவிடும் பணத்தை, வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி ஏழை மக்களின் பசியைத் தீர்க்கலாம் என்பதாலா? அல்லது, காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டமைப்புக்கு கான்டிராக்ட் விட்டதில் பெருமளவு ஊழல் நடந்தது என்றா?
 
இரண்டும் இல்லை!
 
‘இந்தப் போட்டிகளுக்காக செலவிடும் 35 ஆயிரம் கோடியை குழந்தைகளின் விளையாட்டுப் பயிற்சிக்காக செலவிட்டால், ஒவ்வொரு சர்வதேச விளையாட்டிலும் இந்தியாதான் பதக்கங்களைக் குவிக்கும்.
 
அப்படி கட்டமைப்பு வசதிகளைத்தான் செய்கிறோமே, அதை ஏதாவது பின்தங்கிய பகுதியில் செய்கிறார்களா என்றால் இல்லை! இந்தியாவின் செழிப்பான நகரமான டெல்லியில், ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்த பகுதிகளில் மீண்டும் இந்தப் போட்டியைக் காரணம் காட்டி பணத்தைக் கொட்டுகிறார்கள். இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகளை, அதிகம் வளர்ச்சி அடையாத மான்செஸ்டர் நகரில் நடத்தினார்கள். அதற்காக செய்யப்பட்ட கட்டமைப்புகள் அந்த நகரை சர்வதேச தரத்துக்கு உயர்த்தின. பின்தங்கிய அந்தப் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு இதனால் வேலை கிடைத்தது. வால்மார்ட் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ஸ்டோர் இங்குதான் இருக்கிறது. 18 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமையகம் இங்குதான் இருக்கிறது. இப்படி ஏதாவது பின்தங்கிய நகரத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம்’ என்கிறார் அய்யர்.
 
இப்படிச் சொன்ன அய்யருக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பலத்த எதிர்ப்பு. ‘ஏற்கனவே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அய்யர், அந்தப் பதவி மீண்டும் கிடைக்காத விரக்தியில் இப்படிப் பேசுகிறார். அவர் பொறுப்பற்ற தேச துரோகி’ என்று காய்ச்சி எடுக்கிறார் காமன்வெல்த் போட்டிகளுக்கான அமைப்புக்குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி. எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட அய்யரைத்தான் திட்டுகிறது. ‘‘இந்தியாவின் கௌரவம் இந்தப் போட்டிகளை ஒழுங்காக நடத்துவதில்தான் இருக்கிறது’’ என்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்.
 
போட்டிகளை எதிர்க்கும் அய்யர் தேசதுரோகியா?
 
அல்லது, இந்தப் போட்டிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவது தேச துரோகமா?
இப்படி செலவழித்து பெறும் பாராட்டுகளில்தான் இந்தியாவின் கௌரவம் அடங்கியிருக்கிறதா?
நீங்களே சொல்லுங்கள்...            
மேடை

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்

sikkandar
Mr.மணிசங்கர்அய்யர் சொல்வது 100 சதம் ரைட்