போதி தர்மரும் தாமோவும்!
ழாம் அறிவு இசை வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படம் பற்றிய எதிர்பார்ப்பும், படம் குறித்து வெளியாகிவரும் தகவல்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில், கௌதமபுத்தரின் சீடர் வழிவந்த ‘போதி தர்மராக’ நடித்திருக்கிறார் சூர்யா. அந்தக் காலத்தில் காஞ்சிபுரம், பவுத்த காஞ்சி, சமண காஞ்சி, வைணவ காஞ்சி என இருந்தது. பவுத்த துறவிகள் நிறைந்து வாழ்ந்த காஞ்சியில் பிறந்து வளர்ந்த போதி தர்மர், தமிழர்களின் மார்ஷியல் ஆர்ட் கலையான களறி பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றவராக விளங்கினார்.
 
இவர் சீனாவுக்கு பயணம் செய்து, இந்தத் தற்காப்பு கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். இவர் பயிற்றுவித்த களறியே நம்மிடம் கராத்தே கலையாகத் திரும்பி வந்தது. இந்த உண்மை வரலாற்றையே ஏழாம் அறிவில் தமோவின் கதையாக பத்து நிமிடம் வருமாறு வடித்திருத்கிறார் இயக்குனர்.
தமிழ்நாட்டில் பிறந்த போதி தர்மரை, சீனாவில் தாமோ என்ற  பெயரில் மார்ஷியல் ஆர்ட் கலையின் கடவுளாக  கோயில்கட்டி கும்பிட்டு வருகிறார்கள். அவரின் வாழ்க்கை கதையோடு இன்றைய வாழ்க்கையும் இணைத்து கதையைத் தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் இந்த தாமோ புத்த துறவி காட்சிகள் வர இருக்கிறதாம். இந்தக் காட்சியை படமாக்கிக்கொண்டு இருக்கும்போது சீன மொழிப் பாடல் ஒன்று இதற்கு பின்னணியாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்தாராம் இயக்குனர்.

உடனே ஹாரிஸ் ஜெயராஜை தொடர்பு கொண்டு தனது ஆசையைக் கூறவே, அவரும் பாடலாசிரியர் மதன் கார்க்கியுன் இணைந்து இப்பாடலை தயார் செய்து இருக்கிறார்கள். பாடலை எழுதிவிட்டு ஒரு சீன மொழி ஆசிரியரைக் கொண்டு பாடல் வரிகளை சரி பார்த்து தயார் செய்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து ஒரு சீன குழந்தையை வைத்து இந்தப் பாடலை பாட வைத்து இருக்கிறார்கள். மேலும் ஒரு சிறப்பு அம்சமாக பாடலில் இருக்கும் இரண்டு  தமிழ் பாடல் வரிகளையும் அந்தக் குழந்தையையே பாடவைத்திருக்கிறார்கள். “ தி ரைஸ் ஆஃப் தாமோ”  என்று தொடங்கும் அந்தப் பாடலை இசை வெளீயிட்டு விழாவில் லைவ் இசையில் பாட இருக்கிறார்கள். கூடவே புத்தத்துறவிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்