3 இடியட்டிஸ்: கரீனா இடத்துக்கு கதாநாயகி ரெடி! ஷங்கர் 3 இடியட்ஸ் ரீமேக்கை இயக்குகிறார் என்றதுமே சூடுபிடித்தது கோடம்பாக்கம். ஷங்கருக்கு ரீமேக், மல்டி ஸ்டாரர் இரண்டுமே புதுசு. மேலும் 3 இடியட்ஸில் எந்தவித பிரமாண்டத்தையும் ஷங்கர் செய்துவிட முடியாது. காரணம் கதை அப்படி!

ஆனால் ஷங்கர் இந்தப் படத்தை ஒத்துக்கொண்டது ஒரு மாற்றத்துக்காக என்கிறார்கள். தனது சொந்தத் தயாரிப்பில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்களுக்குக் கொடுத்துவரும் ஷங்கர், நாமும் நல்ல , ஆழமான கதைகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று எடுத்த முடிவின் தொடகம்தான் 3 இடியட்ஸ் என்று சொல்கிறார்கள் அவரது உதவியாளர்கள்.  அதிலும் எப்போதோ சேர்ந்திருக்க வேண்டிய ஷங்கர்-விஜய் காம்பினேஷன் இப்போது சேர்ந்திருக்கிறது.

விஜய் இடத்தில் முதலில் ஷங்கர் யோசித்தது சூரியாவைத்தானாம். மேலும் சென்னை தி. நகரில் சூரியாவும் இயக்குனர் ஷங்கரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான கதையில் இணைய முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஜெமினி நிறுவனம், முதலில் விஜயிடம் பேசிவிட்டது என்கிறார்கள். எனக்கும் படத்தை ஷங்கர் இயக்குகிறார் என்றால் இரட்டிப்பு சந்தோஷம். வேலாயுதம் முடிந்ததுமே தொடர்ச்சியாக கால்ஷீட் தர ரெடி என்றாராம்.

மாதவன் இடத்தில் எஸ்டிஆர் என்கிற சிம்பு நடிக்க ஒப்புகொண்டு ஒப்பந்ததிலும் கையெழுத்துப் போட்டுவிட்டதாகத் தயாரிப்பாளர் தரப்பில் உறுதியான தகவல் தருகிறார்கள். மூன்றாவது இடியட் இன்னும் ரெடியாகாத நிலையில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் முதலில் பரிசீலிக்கப்பட்டது காஜல் அகர்வால் பெயராம். ஆனால் கரீனா இடத்துக்குத் தேர்வாகி இருக்கிறார் இலியானா. ஏற்கனவே போக்கிரி படத்தில் விஜயுடன் நடிக்கத் தவறிய இலியானா இம்முறை விஜயுடன் நடிப்பது கிட்டத்திட்ட முடிவாகிவிட்டது என்கிறார்கள்.   

இன்னொரு பக்கம் இந்த இடையழகி, விக்ரமோடு வெடி படத்தில் மத்தாப்பாகச் சிரிக்க வந்திருக்கிறார். தமன்னா இடத்துக்கு காஜல் அகர்வால், இலியானா என இரண்டு இடைகள் வந்தாகிவிட்டது. இனி தமன்னா மெல்ல டோலிவுட், பிறகு பாலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பும் வாய்ப்புகள் அதிகம்.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்